Tuesday, April 17, 2007

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர் விளையாடி நான் பார்த்த முதல் match எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. மழை காரணமாக over குறைக்கப்பட்டு 16 அல்லது 20 over மேட்ச் அது. over குறைத்தன் காரணமாக exhibition
மேட்ச் ஆகத்தான் அது விளையாடப்பட்டது. வந்தவுடன் அடித்து ஆட ஆரம்பித்தார். கடைசியாக 1 ரன்னில் நாம் தோற்றதாக ஞாபகம்.

அன்று முதல் நான் சச்சினின் தீவிர ரசிகன்.

ஆனால், 6 அல்லது 7 வருடங்களுக்கு முன்பே, அது மாறி விட்டது. 2003 உலக கோப்பைக்கு முன்பே, நான் சச்சினின் தீவிர ரசிகன் என்ற நிலைப்பாடு மாறி விட்டது.

காரணம், ஸ்டீவ் வாஹ் மாதிரி அசையாமல் நின்று பெரிய முக்கியமான போட்டிகளில் விளையாடுவது என்பது சச்சினால் முடியவில்லை. லாரா போல் செஞ்சுரி அடித்தாலும் பெரிய செஞ்சுரியாக (160 அல்லது 170)
என்று அடிக்க முடியவில்லை. செஞ்சுரி அடித்தவுடன் அவுட் ஆவது என்பதுதான் நடந்தது. சச்சின் ஒரு underachiever என்பது என் கருத்து. புள்ளி விவர கணக்குப் படி நிறைய சாதித்து இருந்தாலும், வெளிநாடுகளில்
நடந்த ஒரு போட்டித்தொடரைக் கூட சச்சினுடைய 17 வருட அனுபவத்தில் வெல்ல முடியவில்லை. கிரிக்கெட் ஒரு team game என்பதை தாண்டி, சச்சின் அவருடைய தனிப் பட்ட திறமையால் இன்னும் நிறைய
match winning innings ஆடியிருக்க வேண்டும் என்பது என் அபிப்பிராயம்.

பாகிஸ்தான் உடன் சென்னை-டெஸ்ட் மேட்சில் சச்சின் அடித்த செஞ்சுரி அவரது தலை சிறந்த செஞ்சுரிகளில் ஒன்றாக கருதப்பட்டாலும் அவர் 20 ரன்னுக்கும் குறைவாக எடுக்க வேண்டிய நிலையில் அவுட் ஆகி
ஆரம்பித்த வேலையை முடிக்கவில்லை (not a finisher) என்றுதான் நான் நினைத்தேன்.

ஆனால், சிலர் சொல்வதை போல் அவர் சுயநல ஆட்டக்காரர் இல்லை. 1996 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுடன் 90 ரன்னில் அவுட். 2003 உலக கோப்பையில் பாகிஸ்தானுடன் 98 ரன்னில் அவுட். அந்த 2 மேட்சிலும் அவர் செஞ்சுரிக்காக நின்றிருந்தால் மிகவும் எளிதாக அடித்து
இருக்கலாம். அவர் அதை செய்யவில்லை. சில டெஸ்ட் மேட்சில் சதம் அடிப்பதற்காக மெதுவாக விளையாடி இருக்கலாம். டெஸ்ட் மேட்சில் மெதுவாக விளையாடுவது சகஜமே. சில ஒரு நாள் ஆட்டங்களில்,
இந்தியா முதலில் பேட்டிங் செய்யும் போது, நிதானமாக ஆடியிருக்கலாம். ஆனால், அதன் காரணம் சுயநலமாக இருக்க முடியாது என்பது எனது நம்பிக்கை.

அதே போல் இன்னும் சச்சின் விளையாட காரணம் பண ஆசை என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், எனக்கு சச்சினுக்கு கிரிக்கெட்டின் மீது உள்ள தீரா காதல் தான் காரணம் எனத் தோன்றுகிறது.

கிரெக் சாப்பலுடன் சச்சினுக்கு என்ன பிரச்சினையாக இருந்தாலும் சச்சினுக்குதான் எனது ஆதரவு. ஒரு பள்ளிக்கூட மாணவனோ அல்லது கல்லூரி மாணவனோ கூட ஆசிரியர் சொல்லுவதை கேட்க மறுக்கும்
பொழுது இவ்வளவு பெரிய சாதனையாளர் கிரெக் சாப்பல் சொன்னால் (அது தெய்வ வாக்காகவே இருந்தாலும்) மறு மொழி பேசக்கூடாது என்றால் அது என்ன நியாயம்? என்னை பொறுத்த வரை, இது கிரெக்
சாப்பலலின் man management skills பிரச்சினை மற்றும் கலாச்சார புரிதலின்மை பிரச்சினை. நமது கணிப்பொறியாளர்கள் அமெரிக்காவுக்கோ அல்லது ஐரோப்பாவுக்கு போவதற்கு முன்னால் நிறுவனம் அவர்களுக்கு
cross cultural training அளிக்கும். போகக் கூடிய நாட்டின் கலாச்சாரம் என்ன மற்றும் அங்கு உள்ளவர்களோடு எப்படி பழக வேண்டும் போன்ற விஷயங்கள் சொல்லித்தரப் படும். கிரெக் சாப்பலுக்கு அந்த மாதிரி
BCCI ஒரு பயிற்சி அளித்திருக்கலாம்.

இது வரை சச்சின் big match winner-ஆக இருந்தது இல்லை. முக்கியமான போட்டிகளில் சொதப்பி விடுவார்.

ஆனாலும், technically good batsman. இன்னும் இந்தியாவின் தலைசிறந்த 11 வீரர்களுள் ஒருவர். இந்தியாவுக்காக விளையாட அவருக்கு இன்னும் தகுதி இருக்கிறது. அப்படி ஒன்றும் அவரை விட திறமை
வாய்ந்த்தவர்கள் முட்டி மோதிக் கொண்டிருக்கவில்லை.

மற்றும் அவருடைய commitment-ஐ யாரும் கேள்வி கேட்க முடியாது.

இந்த நிலையில் விளையாடுவதோ அல்லது ஒய்வெடுப்பதோ அவரது விருப்பம்.

0 comments: